படம் | புஷ்பா படக்குழு
சினிமா

பிகார்: அல்லு அர்ஜுன் நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்! ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு!

பிகாரில் அல்லு அர்ஜுனை காண கட்டுக்கடங்காத கூட்டம்: நெரிசலால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு

DIN

பிகாரில் அல்லு அர்ஜுனை காண கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவான புஷ்பா திரைப்படம் மாநில எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடையும் பாவனையும் உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் வட மாநில மக்களிடமும் அல்லு அர்ஜுன் மிகப் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இன்று(நவ. 17) பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விடுமுறை நாளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க, மக்கள் கூட்டம் மைதானத்துக்கு வெளியே அலைமோதியது. பாஸ் வாங்கிச் செல்ல ரசிகரக்ள் முண்டியடித்துக்கொண்டு நின்றதால் மைதானத்துக்கு வெளியே கூட்ட நெரிசல் அதிகரித்தது. அதில் பலர் கீழே தள்ளிவிடப்பட்டனர். ஒரு சிலருக்கு காயமும் உண்டானது.

இதையும் படிக்க: புஷ்பா 2: டிரைலர்

கைகளில் பாஸ் கிடைத்ததும் நிகழ்ச்சியைக் கண்டுரசிக்கும் ஆர்வத்தில் துள்ளிக்குதித்துச் சென்ற ரசிகர் பட்டாளத்தையும் காண முடிந்தது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. டிசம்பர். 5-ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? -கனிமொழி எம்.பி. கண்டனம்!

வெட்கச் சிரிப்பில்.... அனுமோள்!

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

SCROLL FOR NEXT