திரிஷா. 
சினிமா

தேனிலவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு தெரிவியுங்கள்: திரிஷா

தேனிலவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு தெரிவியுங்கள் என நடிகை திரிஷா நக்கலாகப் பதிவிட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தேனிலவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு தெரிவியுங்கள் என திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து நடிகை திரிஷா நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் 22 ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகை வலம் வருபவர் திரிஷா. இவரது நடிப்பில் இந்தாண்டு அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமல், சிம்புவுடன் தக் லைஃப், ஐடென்டிட்டி ஆகிய படங்கள் வெளியாகின. இவர் தற்போது சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்து வருகிறார்.

பல நடிகைகள் வந்து போனாலும், சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை திரிஷா, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் செய்திகள் உலா வருவது வழக்கம். ஆனால், திரிஷா தரப்பில் இருந்து உறுதியாக எதுவும் இதுவரை கூறப்படவில்லை.

இந்த நிலையில், நடிகை திரிஷாவுக்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பம் முடிவு செய்து, புதிதாக வரன் பார்த்து வருவதாகவும், மணமகன் சண்டீகரைச் சேர்ந்த தொழிலதிபர் என்றும், அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இதுவரை இந்தச் செய்தி குறித்து திரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளிக்கு வைக்கும் விதமாக நடிகை திரிஷா தனது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “என்னுடைய வாழ்க்கையைப் பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்” என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் திரிஷா.

Trisha Krishnan breaks silence on wedding rumors with a savage reply: 'Schedule the honeymoon too'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT