முகப்பு
தமிழ்நாடு

த்ரிஷா பற்றி பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

நடிகை த்ரிஷா பற்றி பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளது பற்றி...

Updated On : 16 பிப்ரவரி 2026, 3:29 pm IST
நடிகை த்ரிஷா | நயினார் நாகேந்திரன்
பகிர்:

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும்போது நடிகை த்ரிஷா குறித்துப் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும்போது நடிகை த்ரிஷாவின் பெயரைக் குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பேசினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தொடர்ந்து நடிகை த்ரிஷா தனது வழக்கறிஞர் மூலமாக நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் பேசுவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் நான் அரசியலில் நடுநிலையாகவே இருக்கவே விரும்புகிறேன், எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், த்ரிஷா குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பொருத்தமட்டிலும் எந்தவொரு தனி நபர் விமர்சனத்தை நான் அனுமதிப்பதில்லை, நானும் பேசியது இல்லை.

அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. அதற்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் என்னிடம் பேசியிருந்தார்கள். நேற்றுகூட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டிற்குச் சென்றபோது அவரும் இதுகுறித்துப் பேசினார்.

உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால் என்னுடைய வருத்தத்தை மனப்பூர்வமாக நான் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளாகவே நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.

த்ரிஷாவின் அறிக்கை...

த்ரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற அருவருக்கத்தக்க, பொருத்தமற்ற ஒரு கருத்தைத் தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல. அப்படி இருக்கவும் விரும்பவில்லை. கடந்த காலங்களைப் போலவே, நான் அரசியலைப் பொருத்தவரை நடுநிலையுடன் இருக்கவே விரும்புகிறேன்.

தொழில்ரீதியாக என்னை பேச வேண்டுமேதவிர அரசியல்ரீதியாக என்னைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. குறிப்பாக, எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள், பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனக்கு தொடர்பில்லாத இதுபோன்ற விஷயங்களில் எனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

TN BJP leader Nainar Nagendran has expressed regret for speaking about actress Trisha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.