விஜய் படத் தலைப்பு சர்ச்சை: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
விஜய் 60 என்று குறிப்பிடப்படும் விஜய்யின் அடுத்தப் படத்தை பரதன் இயக்கி வருகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் 60 என்று குறிப்பிடப்படும் விஜய்யின் அடுத்தப் படத்தை பரதன் இயக்கி வருகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், சதீஷ், ஆடுகளம் நரேன், அபர்ணா வினோத் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஜய் 60 படத்தின் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் 60, 2017 பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று செய்தி வெளிவந்தது. ஆனால் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் இதை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘விஜய் 60 படத்துக்கு 'எங்கள் வீட்டுப் பிள்ளை' என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்கிற பொய்யான தகவல் பரவி வருகிறது. இதற்குச் சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகிறார்கள். இது முற்றிலும் தவறான செய்தியாகும். 'எங்கள் வீட்டுப் பிள்ளை' என்கிற இந்தத் தலைப்பை சூட்டுகிற எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்துக்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.