முகப்பு
செய்திகள்

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல...: விஜய்க்கு வைரமுத்து எழுதிய அறிமுகப்பாடல்!

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்து... 

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

தெறி படத்துக்குப் பிறகு விஜய் நடித்துள்ள பைரவா படத்தை பரதன் இயக்கியுள்ளார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்து விஜய்காக எழுதியுள்ள அறிமுகப் பாடல்: 

பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு

குரவ மீனப் புடிக்கக்
குட்டையக் குழப்பு

கட்டுக் கட்டா – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டுப் போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம்
ஒரு வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?

**
காசை எடு
காத்தும் திசையை மாத்தும்
காசை எடு

ஓ... கடலில் ரயிலும் போகும்
காசை எடு

இமயம் 
கொஞ்சம் குனியும்
காசை எடு

பூட்டி வச்சு என்ன பண்ணப் போற? ... ஓ
அள்ளிக் கொடு – இல்ல
ஆட்டம் போடு

சிங்கம் எல்லாம்
சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு

கட்டு கட்டாச் – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டு போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
**
வாழணுமே
ஏழை பாளை நம்மை
வாழ்த்தணுமே

எதிரி வந்தால் 
மோதிப் பாக்கணுமே

ஏய்க்கும் கூட்டம் என்றால்
சாய்க்கணுமே

நீதி கேட்டு – தம்பி
நீயே நில்லு 

தப்பாதப்பா
விஜயன் வில்லு

ரெண்டாயிரம் – ஆண்டா
வாழப்போற? – சும்மா
பூட்டிவச்சு எதுக்கு?

பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?

முழு கட்டுரையைப் படிக்க →