சென்னை: பிரபல நடிகை சமந்தா தீபாவளி அன்று, சமூக வலைத்தளங்களில் புகைப்படப் பகிர்வுக்கென்று புகழ்பெற்ற இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் புகழ்பெற்ற கதாநாயகியாக விளங்குகிறார்.
சமூக வலை தளங்களில் ஆர்வமுடன் செயல்படும் அவர் ஏற்கனவே டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளார். அதன்மூலம் தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்கள், தான் நடிக்கும் திரைப்படங்கள் பற்றிய விஷயங்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமந்தா தீபாவளி அன்று இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றைத் துவங்கியுள்ளார்.இத்தளமானது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட உதவும் ஒன்றாகும். கணக்கு துவங்கிய கையோடு தனது புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.
தான் இன்ஸ்டாகிராமில் இணைந்திருப்பது குறித்து அவர், 'நான் மிகவும் தாமதமாகத்தான் இதில் இணைத்துள்ளேன் என்று தெரியும். ஆனாலும் நானும் வந்து விட்டேன். மகிழ்ச்சியாக உள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.