முகப்பு
செய்திகள்

கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாதது ஏன்? நடிகை நந்தினி விளக்கம்!

கார்த்திக் தற்கொலை செய்துகொண்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. அவரை இறுதியாகக் காணச் சென்றேன்... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:14 PM
பகிர்:

விருகம்பாக்கம் எஸ்.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற கார்த்திகேயன் (29). இவர் தியாகராயநகரில் நவீன உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தார். கார்த்திகேயன் நடத்தும் உடற்பயிற்சிக் கூடத்துக்கு தியாகராயநகரைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை நந்தினி (27) அடிக்கடி வருவார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து நந்தினி, தியாகராயநகரில் வசிக்கும் தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தே வாழ்ந்தனர்.

இப்பிரச்னையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கார்த்திகேயன், சிகிச்சை பெற்று வந்தார். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் திங்கள்கிழமை கார்த்திகேயன் தங்கினார். வெகுநேரமாகியும் அறை திறக்கப்படாததால்  விடுதி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையே கார்த்திகேயனைத் தேடி அவரது குடும்பத்தினர் அங்கு வந்தனர். அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகேயன், குளியலறையில் குளிர்பானத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விடுதியில் போலீஸார் சோதனை நடத்தியதில் கார்த்திகேயன் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என எழுதியிருந்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கார்த்திகேயன் தற்கொலை செய்வதற்கு முன்பு காவல்துறைக்கும் தனது சகோதரிக்கும் கடிதம் எழுதிவைத்துள்ளார்.{pagination-pagination}

தனது சகோதரி ரம்யாவுக்கு எழுதிய கடிதத்தில், அம்மாவை நீ பார்த்துக்கொள். எனக்கு வாழத் தெம்பு இல்லை. இத்தனை நாள் பிணமாகத்தான் வாழ்ந்தேன். என்னால் வாழ முடியவில்லை. என் கெளரவம், மரியாதை போய்விட்டது. என் இறுதி ஆசை, வெண்ணிலாவைப் புதைத்த இடத்தின் அருகே என்னையும் புதைத்துவிடுங்கள் என்று எழுதியுள்ளார். வெண்ணிலா, கார்த்திகேயனின் முதல் காதலி. நந்தினியை கார்த்திகேயன் திருமணம் செய்துகொண்டதால், வெண்ணிலா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கார்த்திகேயன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், என் மரணத்துக்குக் காரணம், என் மாமனார் ராஜேந்திரன்தான். அவர் பணத்துக்காக என்னையும் என் மனைவியையும் பிரித்துவிட்டார். நான் மனைவியுடன் போனில் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர் தடுத்துவிட்டார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நான் தற்கொலை செய்துகொண்டுள்ளேன். என் சாவுக்குக் காரணம் என் மாமனார் தான் என்று எழுதியுள்ளார்.

இந்நிலையில் கணவரின் இறுதிச்சடங்கில் நந்தினி கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நந்தினி இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கார்த்திக் தற்கொலை செய்துகொண்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. அவரை இறுதியாகக் காணச் சென்றேன். ஆனால் அங்கு அவருடைய குடும்பத்தினர் என்னை மிகவும் அவமானப்படுத்தினார்கள். கார்த்திக்கின் முகத்தைப் பார்க்க எனக்கு அனுமதியளிக்கவில்லை. பிரச்னை எதுவும் வரக்கூடாது என்பதால் கார்த்திக்கின் முகத்தைப் பார்க்காமல் திரும்பிவந்துவிட்டேன். வெண்ணிலாவின் கல்லறையின் அருகில்தான் கார்த்திக்கைப் புதைத்துள்ளார்கள். இருவாரங்களுக்கு முன்புகூட கார்த்திக்கைச் சந்தித்தேன். இருவரும் சினிமாவுக்குச் சென்றோம். என் தந்தைதான் தற்கொலைக்குக் காரணம் என அவர் ஏன் கடிதம் எழுதினார் எனத் தெரியாது என்று பேட்டியளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →