முகப்பு
செய்திகள்

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா? புகைப்படம் உருவாக்கிய பரபரப்பு!

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமல் பலரும் குழம்பினார்கள்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:19 PM
பகிர்:

சமூகவலைத்தளத்தில் பரபரப்பு உண்டாக ஒரு புகைப்படம் போதும்.

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டார் என்று இன்று காலை ஒரு செய்தி வெளியானது. இதனால் இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமல் பலரும் குழம்பினார்கள்.

ஒன்றுமில்லை. ஒரு படத்துக்காக வாயில் துணியுடன் கைகள் கட்டப்பட்ட வரலட்சுமியின் புகைப்படம் ஒன்று வெளியானதுதான் குழப்பத்துக்குக் காரணம். இதனால் வரலட்சுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்றொரு வதந்தி பரவியது. இதையடுத்து ட்விட்டரில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளதாவது: 

நான் நலமாக உள்ளேன். அக்கறைக்கு நன்றி. அது படத்தின் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம். இதை வைத்து பட விளம்பரம் செய்யப்படும் எனத் தெரியாது. சேவ் சக்தி அமைப்பு தொடர்புடைய வேலைக்காக தில்லியில் உள்ளேன். சிரமத்துக்கு மன்னிக்கவும் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →