முகப்பு
செய்திகள்

மீண்டும் தொடங்கியது விஸ்வரூபம் 2: அப்போ சபாஷ் நாயுடு?

விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

Updated On : 22 ஏப்ரல், 2017 at 4:32 PM
பகிர்:

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ட்விட்டரில் இசையமைப்பாளர் ஜிப்ரான், விஸ்வரூபம் 2 பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். இப்படத்தின் உதவி இயக்குநரும் இயக்குநருமான ராஜேஷ் கூறும்போது: ஆமாம். விஸ்வரூபம் 2 படப்பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதே குழுவுடன். விஸ்வரூபம் படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. விஸ்வரூபம் படத்தை விடவும் இது பெரிய படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

இன்னமும் ஒரு வாரப் படப்பிடிப்பு மீதமுள்ளது. இதன் பிறகு படத்தொகுப்புப் பணிகள் என இறுதிக்கட்டப் பணிகளில் படம் உள்ளது விஸ்வரூபம் 2. 

Advertisement

கமல் நடித்து இயக்கி வரும் இந்தப் படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இந்த ஆண்டு எப்படியும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல் நடித்து இயக்கி வந்த சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு விஸ்வரூபம் 2 படம் வெளியான பிறகு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பிக் பாஸ் தமிழ் டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கமல் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ருதியும் சங்கமித்ரா படத்தில் நடிப்பதால் இருவரின் தேதிகளும் கிடைப்பது கடினம் என்கிற சூழல் நிலவுகிறது. எனவே சபாஷ் நாயுடு-வின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்களாகும் என்று அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.