முகப்பு
செய்திகள்

ஒவ்வொன்றாக வெளியிடப்படும் விவேகம் புகைப்படங்கள்: ரசிகர்கள் பரவசம்! (படத்தொகுப்பு)

சரியான இடைவெளியில் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிட்டு அஜித் ரசிகர்களைப் பரவசப்படுத்தி வருகிறது விவேகம் படக்குழு.

Updated On : 22 ஏப்ரல், 2017 at 2:59 PM
பகிர்:

சரியான இடைவெளியில் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிட்டு அஜித் ரசிகர்களைப் பரவசப்படுத்தி வருகிறது விவேகம் படக்குழு.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் "விவேகம்.' இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துவருகிறார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத்.

இப்படத்தின் டீசர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் டீசர் வெளியிடப்படுகிறது. இத்தகவலை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Advertisement

இந்நிலையில் புகைப்படங்களை வெளியிடுவதில் இந்தப் படம் ஒரு புதிய நடைமுறையைப் பின்பற்றுகிறது. அதன் இயக்குநர் சிவா-வின் ட்விட்டர் வலைத்தளம் மூலமாக சரியான இடைவெளியில் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்படுகிறது. எல்லாமே அஜித் தொடர்புடைய படங்கள். ஒவ்வொன்றிலும் அஜித் ஸ்டைலிஷாகவும் வித்தியாசமாகவும் உள்ளதால் அடுத்தப் படம் எப்போது வெளியிடப்படும் என்கிற ஆவல் உண்டாகிறது. இதுவரை வெளியான விவேகம் புகைப்படங்களின் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.