செய்திகள்

 தினேஷ் நந்திதா இணைந்து மீண்டும் நடித்துள்ள 'உள்குத்து' மே 12 ரிலீஸ்

DIN

'அட்டக்கத்தி' திரைப்படத்திற்கு பிறகு தினேஷும்-நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்து  இருக்கும் திரைப்படம் - 'உள்குத்து'. அதிரடியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'உள்குத்து' திரைப்படத்தை  கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க  நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷை காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'பி கே பிலிம் பேக்டரி' ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'உள்குத்து' திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி அன்று வெளியாக  உள்ளது. 

'தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வெற்றி கண்டு வருவது எங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. இப்போதெல்லாம், 'நல்ல தரமான கதையம்சம் நிறைந்த படங்களை அதிகளவில் திரையிடுங்கள்' என்று தான் திரையரங்கு உரிமையாளர்களிடம்   ரசிகர்கள் கேட்கின்றார்கள். அதை நிரூபிக்கும் வண்ணமாக எங்களின் உள்குத்து திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும். எங்களுக்கு உறுதுணையாய் இருந்து, தன்னுடைய பேராதரவை அளித்து வரும் அபினேஷ் இளங்கோவன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்" என்று கூறுகிறார் தயாரிப்பாளரும்,   'பி கே பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் நிறுவனருமான ஜி விட்டல் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT