செய்திகள்

சமந்தா - நாக சைதன்யா ஜோடியின் வியக்க வைக்கும் திருமண ஏற்பாடுகள்!

ஜனவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சமந்தா நாக சைதன்யா ஜோடியின் திருமண ஏற்பாடுகள்

DIN

ஜனவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சமந்தா நாக சைதன்யா ஜோடியின் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆடம்பரமாக அக்டோபர் 6 லிருந்து 9 தேதி வரை கோவாவில் நடக்கவிருக்கும் இத்திருமணத்துக்கான பிரம்மாண்டமான இடமொன்றினை ஏற்பாடு செய்துள்ளனர். 

மணமக்களின் உடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் க்ரெஷா பஜாஜ் வடிவமைக்கிறார். திருமணத்துக்காக பிரத்யேகமாக மூன்று உடைகளும், 8-ஆம் தேதி கிருஸ்துவ முறைப்படி நடக்கவிருக்கும் திருமண வைபவத்துக்கும் சமந்தாவுக்கு தேவதை போன்ற வெள்ளை உடையலங்காரமும் தயார் செய்து வருகிறார் க்ரெஷா.

இந்து முறைப்படி நடக்கவிருக்கும் திருமணத்துக்கு நாக சைதன்யாவின் தாயார் குடும்பத்தின் பாரம்பரிய புடைவையை சமந்தா அணிவார். புகழ்பெற்ற தயாரிப்பாளார் ராமநாயுடுவின் மனைவி D.ராஜேஸ்வரி அணிந்து பத்திரப்படுத்திய சேலை அது.  அப்புடவை சமந்தாவுக்கு அகினேனி மற்றும் டகுபதி குடும்பத்தாரின் பரிசு எனலாம். அதனை திருமண நாளன்று அணியப் போவதில் மிகவும் பெருமை என்று மகிழ்கிறார் சமந்தா.

க்ரெஷா பஜாஜ்

க்ரெஷாவின் கைவண்ணமும் இந்தப் புடவையில் இருக்குமாம். அந்தப் புடவையுடன் சேர்த்து ஒத்திசைவாக  நகையலங்காரம் செய்யவிருக்கிறாராம். தனது கணவர் வன்ராஜ் ஜாவெரியின் கடையிலிருந்து சில நகைகளை வாங்கி சமந்தாவை வைரத்தாலும், தங்கத்தாலும் இழைக்கப் போகிறாராம் க்ரெஷா. மணப்பெண் அபரிதமான அழகுப் பதுமையாக காட்சியளிக்கப் போவது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள்... ஆஷிகா ரங்கநாத்!

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

SCROLL FOR NEXT