செய்திகள்

முதல் மூன்று நாள்களில் ரூ. 50 கோடி வசூலிக்காத ஷாருக் கான் படம்!

எழில்

'ஜப் ஹாரி மெட் சேஜல்' (Jab Harry Met Sejal) படத்தில் ஷாருக் கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ளார்கள். இமிதியாஸ் அலி இயக்கியுள்ளார்.

ரூ. 90 கோடி செலவில் உருவான இந்தப் படம் இந்தியா முழுக்க 3200 திரையரங்குகளில் வெளியானது.

ஆனால் எதிர்பாராதவிதத்தில், ஜப் ஹாரி மெட் சேஜல் மோசமான விமரிசனங்களை இதுவரை பெற்றுள்ளது. இதனால் இந்தப் படம் பெரிய அளவில் வசூலிக்காது என்று கூறப்படுகிறது. கடந்த வெள்ளியன்று வெளியான இந்தப் படம், முதல் நாளில் இந்தியாவில் ரூ. 15 கோடி பெற்றது. சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் தலா ரூ. 15 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது.

வார இறுதி நாள்களில் (3 நாள்கள்) இந்தப் படம் ரூ. 46 கோடியைப் பெற்றாலும் இந்தப் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்புக்குக் குறைந்தபட்சம் முதல் மூன்று நாள்களில் ரூ. 50 கோடி வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஷாருக்கானின் முந்தைய படமான ரயீஸ், முதல் மூன்று நாள்களில் ரூ. 60 கோடி வசூலித்தது. தோல்விப்படமான ஃபேன், ரூ. 52 கோடியைப் பெற்றது. ஆனால் இந்தளவுக்குக்கூட ஜப் ஹாரி மெட் சேஜல் வசூலிக்கவில்லை. 

இதனால், இந்தப் படம் வரும் நாள்களில் நூறு கோடியை வசூலிக்கவே மிகவும் சிரமப்படும் என்று தற்போது கணிக்கப்படுகிறது.

2017: அதிக முதல் நாள் வசூல்

1 பாகுபலி 2 - ரூ. 41 கோடி 
2 டியூப்லைட் - ரூ. 21 கோடி 
3. ரயீஸ் - ரூ. 20 கோடி
4. ஜப் ஹாரி மெட் சேஜல் - ரூ. 15 கோடி
5. ஜாலிஎல்எல்பி2 - ரூ. 13.20 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை: பயிா்கள், மின்கம்பங்கள் சேதம்

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் தலைமை தோ்தல் அலுவலா் சத்யபிரத சாகு ஆய்வு

மே 20-இல் வரதராஜபெருமாள் கோயில் வைகாசித் திருவிழா

SCROLL FOR NEXT