முகப்பு
செய்திகள்

ஆளப்போறான் தமிழன்: விஜய் பாடல் நாளை வெளியீடு!

ஆளப்போறான் தமிழன் என்கிற பாடலை நாளை வெளியிடவுள்ளதாகப் படக்குழு தகவல் அறிவித்துள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

2007-ல் அழகிய தமிழ் மகன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். அதற்கு முன்பு உதயா படம். அவ்வளவுதான். விஜய் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கும் மூன்றாவது படம் - மெர்சல். 

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

ஆகஸ்ட் 20 அன்று மெர்சல் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கு முன்னோட்டமாக ஒரு பாடலை மட்டும் நாளை வெளியிடப்படுகிறது. ஆளப்போறான் தமிழன் என்கிற பாடலை நாளை வெளியிடவுள்ளதாகப் படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →