முகப்பு
செய்திகள்

நடிகை ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்! 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் நடிகை ஓவியாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட், 2017 at 8:40 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:08 PM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற காரணத்துக்காக அதன் முன்னாள் போட்டியாளர் நடிகை ஓவியாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் நிஜ வாழ்வை பிரதிபலிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகர் கமல்ஹாசன் உள்ளார்.

இதில், நடிகை ஓவியா சக போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். ஆனால், ஆரவ் அதை மறுத்துள்ளார். இந்நிலையில், அந்த அரங்கில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதன்காரணமாக, நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பூந்தமல்லி காவல்நிலைத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விரைவில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நடிகை ஓவியாவுக்கு பூந்தமல்லி போலீஸார் சம்மன் அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.