முகப்பு
செய்திகள்

காதலில் விழுவதும் படம் பிடித்துப்போவதும் ஒன்று: கமல் விளக்கம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

தனக்குப் பிடித்த 70 இந்தியப் படங்களின் பட்டியலை ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளார் கமல். அது சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 

70 படங்களின் பட்டியலை கமல் எதன் அடிப்படையில் தேர்வு செய்துள்ளார்?

இதற்கு கமல் அளித்துள்ள விளக்கம்: 

நான் பார்த்த படங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன். நிறைய நல்ல படங்களையும் நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். ஒரு மனிதனாகவும் ஒரு நடிகனாகவும் என்னை மாற்றிய படங்களையே தேர்வு செய்துள்ளேன். நீங்கள் இறப்பதற்கு முன்னால் பார்க்க வேண்டிய படங்களை நான் பட்டியலிடவில்லை. நான் எந்தப் படத்தையும் பரிந்துரை செய்யவோ என் விருப்பதை உங்கள் மீது திணிக்கவோ இல்லை. 

சினிமா என்பது என் தொழில். என் வாழ்க்கை. நான் ஒரு ஒரு படத்துக்குக் காண்பிக்கும் எதிர்வினை நிச்சயம் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கும். மற்றவர்கள் கவனிக்காத நுணுக்கமான விஷயங்களை நான் கவனித்திருப்பேன். கடைசியில் காதலில் விழுவது போலத்தான். நீங்கள் ஏன் ஒருவரைக் காதலிக்கிறீர்கள்? யாருக்கும் தெரியாது இல்லையா? அதேபோலத்தான் திரைப்படங்களைப் பார்ப்பதும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.