செய்திகள்

ட்விட்டரில் மெர்சல் படத்துக்குக் கிடைத்த புதிய அங்கீகாரம்!

எழில்

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மெர்சல் படத்துக்கென தனி எமோஜி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்திலும் தமிழிலும் மெர்சல் என்று டைப் செய்தால் விஜய் படம் எமோஜியாக அருகில் தோன்றுகிற வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக முக்கிய நிகழ்வுகளுக்கும் பெரிய திரைப்படங்களுக்கும் மட்டுமே இதுபோன்ற ஒரு அங்கீகாரம் ட்விட்டர் தளத்தில் கிடைக்கும். அது தற்போது மெர்சல் படத்துக்கும் கிடைத்துள்ளது.

தமிழ்ப் படங்களில் இதுபோன்ற எமோஜி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் விஜய் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் மெர்சல் எமோஜியைப் பிரபலப்படுத்த மெர்சல் குறித்த ட்வீட்டைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT