செய்திகள்

வெனிஸ் நகரத்தில் மணி ரத்னம் மகன் நந்தனுக்கு ஏற்பட்ட பிரச்னை!

இயக்குனர் மணிரத்னம் சுஹாசினி தம்பதியரின் மகன் நந்தன் வெனிஸில் தங்கியுள்ளார்.

DIN

இயக்குனர் மணிரத்னம் சுஹாசினி தம்பதியரின் மகன் நந்தன் வெனிஸில் தங்கியுள்ளார். சமீபத்தில் நந்தனிடமிருந்து மர்ம நபர்கள் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்துவிட்டனர். அதிகம் பரிச்சயமற்ற நாட்டில் தங்கள் மகனின் தற்போதைய நிலை குறித்து கவலையடைந்தார் சுஹாசினி மணி ரத்னம். இச்சம்பவத்தைப் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், சுஹாசினி தனது மகனின் நிலைமையை விளக்கி டிவீட் செய்ய, வெனிஸ் விமான நிலையத்திற்கு உடனடியாக அவன் செல்ல வேண்டும் என உதவி கோரினார்.

சுஹாசினி ட்வீட் செய்த சில நிமிடங்களிலேயே, பலர் அவரது ட்வீட்டுக்கு பதில் அளித்தனர். சிலர் உதவி செய்யவும் வாக்களித்தனர். விமான நிலையத்தின் அருகே இருந்தவர்கள் சிலர் நந்தன் பாதுகாப்பாக உள்ளதாகக் கூறினர். உதவியற்ற நிலையில் தங்கள் ஆதரவை அளித்த அனைவருக்கும் தம்பதியர் நன்றி கூறினர்.

நந்தனுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சுஹாசினி மீண்டும் டிவீட் செய்தார். நந்தனைப் பற்றி மணி ரத்னம் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது தன் மகன் அரசியலில் ஈடுபாடு உடையவர் என்றும் மார்க்சிசம் மற்றும் லெனினிசத்தில் ஆர்வமுள்ளவர் என்றும் தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசாகா வரலாற்றுச் சாதனை..! இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனையுடன் மோதல்!

டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

SCROLL FOR NEXT