செய்திகள்

சமந்தா, நாக சைதன்யா திருமணத்திற்கு பிரபலங்கள் யாருக்கும் அழைப்பில்லை!

அறிமுகப் படத்திலேயே இந்த ஜோடி ரசிகர்களின் உள்ளத்தை மொத்தமாக கொள்ளையடித்து விட்டது.

சரோஜினி

வரவிருக்கும் புதுத்திரைப்படங்கள் தாண்டியும் டோலிவுட்டையும், அதன் ரசிகர்களையும் மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருப்பது சமந்தா, நாக சைதன்யா திருமணம் தான். சைதன்யா பக்கம் பார்த்தால், தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவ் எம்ஜிஆர், சிவாஜி காலத்து சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், அப்பா நாகார்ஜுனாவும் தமிழ், தெலுங்கில் பலரது இதயத்தைத் திருடிய இனிமையான நடிகர் ’சைது’ எனச் செல்லமாக டோலிவுட் ரசிகர்களால் அழைக்கப்படும் நாக சைதன்யாவும் தெலுங்கில் இப்போது வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவர். 

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த வெற்றித்திரைப்படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’  திரைப்படம் தெலுங்கில் ‘ஏ மாய சேஸாவே’  என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்தத் திரைப்படம் மூலம் டோலிவுட்டில் அடியெடுத்து வைத்த சைதுவுக்கு, அது எப்படி அறிமுகப்படமோ, அப்படியே சமந்தாவுக்கும் அது தான் அறிமுகப்படம். அறிமுகப் படத்திலேயே இந்த ஜோடி ரசிகர்களின் உள்ளத்தை மொத்தமாக கொள்ளையடித்து விட்டது. அந்தப் படத்துக்குப் பிறகு அக்கினேனி நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, சைதன்யா, அகில் என மொத்த அக்கினேனி குடும்ப ஸ்டார்களும் நடித்து வெளிவந்த அக்கினேனி குடும்பத் திரைபப்டமான ‘மனம்’  திரைப்படத்திலும் சமந்தா தான் ஹீரோயின். எனவே டோலிவுட்டைப் பொருத்தவரை சைதன்யா, சமந்தா திருமணம் என்பது  மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வு! அதனால் தான், நாகார்ஜுனா வீட்டுத் திருமணத்திற்கு யார்,யாருக்கெல்லாம் அழைப்பிருக்கக் கூடும் என டோலிவுட் பிரபலங்களுக்குள் மிகப்பெரிய போட்டாபோட்டியே நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் தற்போது திருமணம் நெருங்கிக் கொண்டிருக்கையில் திடீரென நாகார்ஜுனா, திருமணம் என்பது தனிப்பட்ட நிகழ்வாக நடைபெற இருப்பதாகவும், அக்டோபர் 6 மற்றூம் 8 தேதிகளில் முறையே இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடத்தி முடித்ததும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். சமந்தா, நாக சைதன்யா திருமணத்தில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த பிரபலங்களுக்கு இந்த அறிவிப்பு சறு ஏமாற்றமளித்தாலும் வரவேற்புக்காவது அழைப்பிருந்தால் சரி என ஆறுதல் பட்டுக் கொள்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

SCROLL FOR NEXT