செய்திகள்

ரூ. 23 கோடி லாபம் அளித்த கந்தசாமி படம்: இயக்குநர் சுசி கணேசன்

எழில்

திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சுசி கணேசன். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கும் தமிழ்ப் படம் இது. பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.

இந்நிலையில் கந்தசாமி படத்தின் வியாபாரம் குறித்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

கந்தசாமி படம் தோல்வியடைந்ததால் பல ஆண்டுகளாக நான் தமிழ்ப் படம் இயக்கவில்லை என்பது உண்மையில்லை. மும்பைக்கு நகர்ந்து ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்டேன். இது என் சொந்த முடிவு. மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்பும்போது அகோரம் சாரின் நிறுவனத்துக்குப் படம் தயாரிக்க விருப்பப்பட்டேன். ஏனெனில் அவர்களிடம்தான் என்னுடைய அடுத்தப் படத்துக்கு முன்பணம் வாங்கியிருந்தேன்.

கந்தசாமி படத்தின் வெற்றியோ தோல்வியோ என் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. கந்தசாமி படம் நல்ல வசூலைப் பெறவில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அது தயாரிப்பாளருக்கு ரூ. 23 கோடி லாபம் அளித்த படம். அந்தப் படம் ரூ. 23 கோடியில் தயாரிக்கப்பட்டது. ரூ. 52 கோடிக்கு வியாபாரம் ஆனது. ஒரு படத்தை அதிக விலைக்கு விற்கும்போது அதன் பாரம் கதாநாயகன், இயக்குநரைப் போய்ச்சேரும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT