முகப்பு
செய்திகள்

சீமான் தம்பிகளுக்கு இயக்குநர் சேரன் நன்றி! இனி அரசியல் பதிவுகளை எழுதுவதில்லை என உறுதி!

நான் சென்னை வந்தது சினிமா எடுக்க, அந்த வேலையை மட்டும் பார்க்கிறேன். என் கருத்துகள் இனி திரையில்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

சமூகவலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை வெளியிட்டு வந்த இயக்குநர் சேரன், இனிமேல் என் கருத்துகள் திரையில் மட்டும் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் இயக்குநர் சேரன் கூறியதாவது:

நண்பர்களே.. இனி அரசியல் சார்ந்து எந்த பதிவுகளும் நான் பதிவிடப் போவதில்லை. யாரைப் பற்றியும் பேசப் போவதில்லை. சினிமா சார்ந்து மட்டுமே பேசுவோம். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை. நான் சென்னை வந்தது சினிமா எடுக்க, அந்த வேலையை மட்டும் பார்க்கிறேன். என் கருத்துகள் இனி திரையில். அண்ணன் சீமான் அவர்களும் அவர்களின் அன்புத் தம்பிகளும் எனக்கு இந்த ஞானத்தை, புத்தியை கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. கோபத்தில் தவறானவார்த்தைகளைப் பயன்படுத்துவோர்க்கு நாகரிகம் கற்றுத்தரும் நல்லமனிதனாக இருக்க நினைக்கிறேன் அதுவே நல்லசமூகம் உருவாக அடையாளமாகும் என்று எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.