டிசம்பர் 15-ல் வெளியாகவுள்ள 'அருவி' படம்!
அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், முகமது அலி பைக் போன்றோர் நடித்துள்ளார்கள்...
'ஜோக்கர்', 'காஷ்மோரா', 'கூட்டத்தில் ஒருத்தன்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், முகமது அலி பைக் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தின் மீது பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்தப் படம் டிசம்பர் 15 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று இதன் டிரெய்லர் வெளியாகவுள்ளது.