திரையரங்குகளுக்கான புதிய பார்க்கிங் கட்டணத்தை அறிவித்தது தமிழக அரசு!
மாநகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் இரு சக்கர வாகனத்துக்கான பார்க்கிங் கட்டணம்...
திரையரங்குகளுக்கான பார்க்கிங் கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு புதிய பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன் விவரம்:
*மாநகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் இரு சக்கர வாகனத்துக்கான பார்க்கிங் கட்டணம் - ரூ. 10; கார் பார்க்கிங் கட்டணம் - ரூ. 20.
*நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் இரு சக்கர வாகனத்துக்கான பார்க்கிங் கட்டணம் - ரூ. 7; கார் பார்க்கிங் கட்டணம் - ரூ. 15.
*நகர பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்குகளில் இரு சக்கர வாகனத்துக்கான பார்க்கிங் கட்டணம் - ரூ. 3; கார் பார்க்கிங் கட்டணம் - ரூ. 5.
* எந்தப் பகுதியிலும் சைக்கிள்களுக்குக் கட்டணம் கிடையாது.