முகப்பு
செய்திகள்

இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் காலமானார்!

1992-ல் அமரன் படம் மூலமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன், மாமன்மகள் உள்ளிட்ட பல படங்களுக்கு...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:17 PM
பகிர்:

பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 63.

1992-ல் அமரன் படம் மூலமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன், மாமன்மகள் உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். கடைசியாக 2003-ல் வெளிவந்த கோவில்பட்டி வீரலட்சுமி படத்துக்கு இசையமைத்தார். ஜெயா தொலைக்காட்சியில் ஆதித்யனின் கிச்சன் என்ற சமையல் நிகழ்ச்சியையும் அவர் நடத்தியுள்ளார். 

ஆதித்யனின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.