செய்திகள்

அனுஷ்காவுக்கு கணவர் விராட் கோலியின் காஸ்ட்லி 'திருமணப் பரிசு' என்ன தெரியுமா?  

கடந்த திங்கள்கிழமை மணம் புரிந்த காதல் மனைவி அனுஷ்காவுக்கு கணவர் விராட் கோலி வழங்கிய காஸ்ட்லி 'திருமணப் பரிசு' என்ன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது   

DIN

புதுதில்லி: கடந்த திங்கள்கிழமை மணம் புரிந்த காதல் மனைவி அனுஷ்காவுக்கு கணவர் விராட் கோலி வழங்கிய காஸ்ட்லி 'திருமணப் பரிசு' என்ன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது   

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர்.நான்கு வருட காதலுக்குப் பிறகு  இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி அவர்களது திருமணம் இத்தாலியின் மிலன் நகர் அருகே உள்ள டஸ்கேனி என்னும் இடத்தில் அமைந்துள்ள சொகுசு விடுதி ஒன்றில் கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்றது.  இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

தற்பொழுது தனது காதல் மனைவி அனுஷ்காவுக்கு கணவர் விராட் கோலி வழங்கிய காஸ்ட்லி 'திருமணப் பரிசு' என்ன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது

விராட் கோலி திருமண நிகழ்வுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வைர மோதிரத்தை மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு திருமண பரிசாக அளித்தார்.  ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல வைர நகை வடிவமைப்பாளர்களால் இந்த மோதிரமானது வடிவமைக்கப்படடுள்ளது

இந்த மோதிரத்தின் விலை சுமார் ஒரு கோடி ருபாய் என தம்பதியருக்கு நேருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகையானது அவர்களது திருமணம் நடைபெற்ற டஸ்கேனி சொகுசு விடுதிக்கு உரிய கட்டணத்தினை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT