ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கோடி ஊதியம்: பிரியங்காவுக்கு வாரி வழங்கும் தனியார் ஊடகம்
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்க தனியார் ஊடக நிறுவனம் முன்வந்துள்ளது.
பாலிவுட்டில் பிரபலமாகத் திகழும் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார். இவருக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்க தனியார் ஊடக நிறுவனம் முன்வந்துள்ளது.
பிரபல தனியார் ஊடக நிறுவனமாக ஜீ ஒவ்வொரு வருடமும் பாலிவுட் படங்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஜீ சினி அவார்ட்ஸ் அங்கு மிகப் பிரபலம்.
இந்நிலையில், இந்த மாதம் நடைபெறவுள்ள ஜீ சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கோடி வரை ஊதியம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அதில், பிரியங்காவின் நடிப்பில் வெளிவந்த 5 நிமிடங்கள் கொண்ட ஒரு பாடலுக்கு அந்நிகழ்ச்சியின் போது நடனமாட ரூ.5 கோடி ஊதியம் வழங்கப்படவுள்ளது. இது விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு நடிகைக்கு அளிக்கப்படும் உச்சகட்டத் தொகையாகும்.
Advertisement
தற்போது ஹாலிவுட்டில் தடம் பதித்து வெற்றிகளைக் குவித்து வரும் பிரியங்கா, 2 வருடங்களுக்குப் பிறகு இதுபோன்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு இத்தனை பெரிய தொகை வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதேபோன்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் விலகிவிட்டார். இருப்பினும் அதே நிகழ்வில் பங்கேற்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பெரிய தொகை வழங்கப்பட்டதும், ஆனால் தனக்கு நிராகரிக்கப்பட்டதும்தான் இந்த விலகலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.