செய்திகள்

மலேசியாவில் நட்சத்திர விழா: இரு நாள்களுக்குப் படப்பிடிப்புகள் ரத்து!

மலேசியாவில் நட்சத்திர விழா நடைபெறுவதையொட்டி, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் இரு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன...

எழில்

மலேசியாவில் நட்சத்திர விழா நடைபெறுவதையொட்டி, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் இரு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான 'நட்சத்திர விழா 2018' வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.

இதையடுத்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நட்சத்திர விழாவில் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாள்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாள்களுக்கு அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT