முகப்பு
செய்திகள்

தமிழில் அறிமுகமாகிறார் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்தப் படத்தில் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்தப் படத்தில் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார். 

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜுன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.

இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கும் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகவுள்ளார் விஜய் தேவரகொண்டா. இவர், மணி ரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாக முதலில் செய்திகள் உருவாகின. ஆனால் அச்செய்திகள் மறுக்கப்பட்ட நிலையில் ஆனந்த் சங்கர் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.