செய்திகள்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு!

சூப்பர் சிங்கர் 6 பட்டத்தை வெல்பவருக்கு என் இசையில் பாட வாய்ப்பளிக்கப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார் ரஹ்மான்...

எழில்

7 அப் தமிழ்நாட்டின் குரல் - பாடகர்களைத் தேர்வு செய்யும் போட்டி குறித்த விளம்பரத்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் நடித்திருந்தார். இந்த நிகழ்ச்சியிலிருந்து ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு ரஹ்மான் குழுவுடன் இணைந்து ஜனவரியில் சென்னையில் நடைபெறுகிற ரஹ்மான் 25 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்கள். மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பாடகர், ரஹ்மானின் கேஎம் மியூசிக் கன்சர்வேடரி-யில் ஒருவருடம் உதவித்தொகை பெறுவார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் ரஹ்மான் ஆதரவு அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கவுள்ள சூப்பர் 6 நிகழ்ச்சியின் விளம்பரத்தில் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். சூப்பர் சிங்கர் 6 பட்டத்தை வெல்பவருக்கு என் இசையில் பாட வாய்ப்பளிக்கப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார் ரஹ்மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி

விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT