முகப்பு
செய்திகள்

'வாலு' இயக்குனருடன் நடிகர் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது?

'வாலு' திரைப்பட இயக்குனர் விஜய் சந்தருடன் நடிகர் விக்ரம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 10-ஆம் தேதி முதல் சென்னையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2017 at 1:43 PM
பகிர்:

சென்னை: 'வாலு' திரைப்பட இயக்குனர் விஜய் சந்தருடன் நடிகர் விக்ரம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 10-ஆம் தேதி முதல் சென்னையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு நடித்த 'வாலு' படத்தின் இயக்குனரான விஜய் சந்தர் தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். சில கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு நடிகர் விக்ரமை வைத்து வர படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

விஜய் சந்தர் கூறிய கதை ஈரத்தால், விக்ரம் உடனடியாக அவருக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இப்பட நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் 'ப்ரேமம்' புகழ் சாய்பல்லவி. பின்னர் கால்ஷீட் பிரச்சினைகளால் அவர் விலகிக் கொண்டார் . எனவே தற்பொழுது தமன்னா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சுகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். பிப்ரவரி 10ம் தேதி முதல் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

முன்னதாக சமீபத்தில் வெளிவந்த பிரபல ஆங்கிலப்படத்தின் ரிமேக்கை விக்ரமை வைத்து விஜய் சந்தர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.