முகப்பு
செய்திகள்

இளையராஜாவின் அருமையான பாடல்கள்: பாலாவின் நாச்சியார் பற்றி ஜி.வி. பிரகாஷ்

கடைசிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. செப்டம்பரில் படம் வெளியாகவுள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இசை - இளையராஜா. பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. 

இப்படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது: நாச்சியார் படத்தின் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. கடைசிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இளையராஜா சாரின் பாடல்கள் அருமையாக உள்ளன. செப்டம்பரில் படம் வெளியாகவுள்ளது என்று கூறியுள்ளார். 

திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, முழுக்க முழுக்க தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். அந்த பாணியில் பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.