செய்திகள்

‘ஷட் அப் பண்ணுங்க’: பாடலை இசையமைக்கவுள்ளார் யுவன்!

‘பலூன் படத்தில் ஷட் அப் பண்ணுங்க என்ற ஒரு ப்ரோமோ பாடல் இடம்பெறவுள்ளது. இந்தப் பாடலை ஓவியாவிற்கு சமர்ப்பிக்கிறோம்’ என்கிற அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தின் போது நடிகை ஓவியா ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என்று கூறியது பலரால் மிகவும் விரும்பப்பட்ட வாக்கியமாகும். இந்நிலையில் இந்த வாசகத்தை வைத்து ப்ரோமோ பாடல் ஒன்று உருவாகவுள்ளது.

இயக்குநர் சைனிஷ் இயக்கத்தில் நடிகர் ஜெய், நடிகை அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் நடிக்கும் படம் பலூன். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. படத்தின் இயக்குநர் சைனிஷ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பலூன் படத்தில் ஷட் அப் பண்ணுங்க என்ற ஒரு ப்ரோமோ பாடல் இடம்பெறவுள்ளது. இந்தப் பாடலை ஓவியாவிற்கு சமர்ப்பிக்கிறோம்’ என்கிற அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஓவியாவிற்கு ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வரும் நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT