இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க: தரமணியின் சர்ச்சைக்குரிய போஸ்டர் வாசகம்!
தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவருகிறது...
தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவருகிறது. இதையொட்டி இப்படம் குறித்த விளம்பரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. விளம்பர வாசகங்கள் சுவாரசியமாக மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன.
முதலில் வெளியிட்ட போஸ்டரில், தணிக்கைக் குழுவின் கூற்றுப்படி ஆண் 'ரா'வாக மது அருந்தினால் யூ/ஏ. பெண் 'ரா'வாக மது அருந்தினால் ஏ. ஆக தரமணி ஏ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
Advertisement
இன்று வெளியிடப்பட்ட போஸ்டரில், ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க. பார்த்துக்கோ... என்று சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றுள்ளது.