முகப்பு
செய்திகள்

மெர்சல்: ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்!

விஜய் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கும் மூன்றாவது படம் - மெர்சல்... 

Updated On : 31 ஜூலை, 2017 at 3:20 PM
பகிர்:

2007-ல் அழகிய தமிழ் மகன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். அதற்கு முன்பு உதயா படம். அவ்வளவுதான். விஜய் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கும் மூன்றாவது படம் - மெர்சல். 

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

மும்பையில் இப்படத்தின் பாடலொன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவேக் எழுதிய பாடலுக்கு ஸ்ரேயா கோஷல், கைலாஷ் கெர் ஆகியோர் பாடியுள்ளார்கள். இப்படத்தில் அனைத்து பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். 

Advertisement

பாடல்கள் வெளியாகும் ஆகஸ்ட் 20 அன்று மெர்சல் பட டீசரும் வெளியிடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.