செய்திகள்

இணையத்தில் வெளியான காலா பாடல்! படக்குழு அதிர்ச்சி

மும்பை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட 1 நிமிடப் பாடல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

எழில்

ரஜினி அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம்.

இந்நிலையில் மும்பை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட 1 நிமிடப் பாடல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. 

மும்பையில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர் இணையத்தளங்களில் கசியவிட்டிருக்கலாம் என்றறியப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை: ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத் துறை முன்னாள் தலைவா் கைது

வெனிசுலா: புதிய மன்னிப்புச் சட்டத்தில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை!

கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!

பாமகவுக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

மேற்கு வங்க எஸ்ஐஆா்: ‘அடையாள சரிபாா்ப்புக்கு 10-ஆம் வகுப்பு சோ்க்கை சான்றிதழ்களை பயன்படுத்தலாம்’!

SCROLL FOR NEXT