செய்திகள்

'பே வாட்ச்' படத்தை வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்

'ஏ' சான்றிதழ் பெற்ற 'பே வாட்ச்' திரைப்படங்களை பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள் திரையரங்குகளில் பார்க்காமல் இருப்பதை காவல்துறை தலைவர்(டிஜிபி), மாநகர காவல் ஆணையர் ஆகியோர் உறுதி

DIN

'ஏ' சான்றிதழ் பெற்ற 'பே வாட்ச்' திரைப்படங்களை பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள் திரையரங்குகளில் பார்க்காமல் இருப்பதை காவல்துறை தலைவர்(டிஜிபி), மாநகர காவல் ஆணையர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டுவைன் ராக் ஜான்சன், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்து வெளியான 'பே வாட்ச்' ஆங்கிலப் படத்துக்கு, சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், இந்த படத்துக்கான போஸ்டர்களில், ஏ சான்றுக்கான முத்திரை இல்லாமல் ஒட்டப்பட்டுள்ளது.

ஏ சான்றிதழை மறைத்து, இந்த படம் திரையிடப்படுவதால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், சிறுவர்களும் இந்த படத்தை பார்க்கக்கூடும். எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் 'கிரீன் கிராஸ் ஹெல்த்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் வைகுந்த் கஸ்தூரிரங்கன் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறுவர்கள் இந்த திரைப்படம் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை.

இந்த படம் பெரியவர்கள் மட்டுமே பார்ப்பதற்கான படமாக இருக்கும்பட்சத்தில், இந்த படத்தை 18 வயதுக்கும் கீழுள்ளவர்கள் திரையரங்குகளில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பதை மாநகர காவல் ஆணையர், காவல்துறை தலைவர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் என்ற நீதிபதிகள் இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT