முகப்பு
செய்திகள்

கதாநாயகியானார் டிவி புகழ் ப்ரியா பவானி சங்கர்! (படங்கள்)

பட வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்துவந்த ப்ரியா, தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஜூன், 2017 at 4:15 PM
பகிர்:

கல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா, பிறகு விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

பட வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்துவந்த ப்ரியா, தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. எந்தப் படத்தில் யாருடன் ஜோடியாக நடிக்கிறார் என்கிற மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.