முகப்பு
செய்திகள்

நான் அரசியலுக்கு வரலாம்: புதுமுக நடிகை டெல்னா டேவிஸ் (படங்கள்)

சினிமா நடிகையாக எவ்வளவு நாள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை...

Updated On : 5 ஜூன், 2017 at 3:16 PM
பகிர்:

பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - குரங்கு பொம்மை. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

பத்திரிகையாளர் சந்திப்பில் புதுமுகம் பட நாயகி டெல்னா டேவிஸ் கூறியதாவது: 

பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. படத்தின் நாயகியாக டெல்னா டேவிஸ் என்கிற புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.

Advertisement

எனக்கு சினிமா ஆசை சுத்தமாக இல்லை. ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன். சினிமா நடிகையாக எவ்வளவு நாள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம். அல்லது உங்களைப்போல ஒரு பத்திரிகையாளராகவும் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம். நான் என்னவாக ஆனாலும் குரங்கு பொம்மை படத்தின் கதாநாயகி என்றுதான் என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு இந்தப் படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு பெயரை இந்தப் படம் பெற்றுத் தரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.