செய்திகள்

புகார் கூறிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்; தொலைப்பேசியில் சிம்பு விளக்கம்!

சிம்புவும் தமன்னாவும் உள்ள அஅஅ படத்தின் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன்...

எழில்

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் - அன்பானவன், அசராதவன், அடங்காதவன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்துள்ளார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் சிம்புவும் தமன்னாவும் உள்ள இந்தப் படத்தின் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அது ஏன் நடிகர் எப்போதும் முழுதாக உடை உடுத்தி இருக்கிறார்? ஆனால் நடிகை குறைந்த உடையே அணிந்துள்ளார்? உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது என்று புகார் கூறும் வகையில் ட்வீட் செய்தார்.

இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்குத் தொலைப்பேசியில் உரையாடி விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியதாவது: சிம்பு இப்போதுதான் என்னிடம் பேசினார். ஒளிவுமறைவு இல்லாத தன்மை. இருவரும் அவரவர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். பெண்களுக்கு நேரும் அவமரியாதைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஸ்டார் போல நடந்துகொள்ளாமல் இந்த விவகாரம் தொடர்பாக நேரடியாக என்னிடம் பேசியதற்காக அவரைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.100 கோடியை நோக்கி நிவின் பாலியின் சர்வம் மாயா!

வைகோவின் நடைபயணத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

திருப்பதி: 2025 இல் லட்டுகள் விற்பனையில் சாதனை!

சரத் குமாரின் புதிய பட போஸ்டர்!

தனியார் பேருந்து மீது மோதிய பைக்! தீக்கிரையாகிய வாகனங்கள்!

SCROLL FOR NEXT