பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!
தமிழுக்காகப் போதிய மாற்றங்களைச் செய்துள்ளோம். தமிழில் நகைச்சுவைக் காட்சிகள் அதிகமாக இருக்கும்...
இது எதிர்பாராத கூட்டணி.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.
மலையாளப் படமான Maheshinte Prathikaram-னின் ரீமேக்கில் இருவரும் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
Advertisement
இதுபற்றி பிரியதர்ஷன் கூறும்போது, இதை ரீமேக் என்று சொல்லமுடியாது. தமிழுக்காகப் போதிய மாற்றங்களைச் செய்துள்ளோம். தமிழில் நகைச்சுவைக் காட்சிகள் அதிகமாக இருக்கும். மலையாள நடிகை நமிதா பிரமோத் கதாநாயகியாக நடிக்கலாம். தேனியில் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறியுள்ளார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள சில சமயங்களில் விரைவில் வெளிவரவுள்ளது. பிரியதர்ஷன் - உதயநிதி படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் ஆரம்பமாகவுள்ளது.