செய்திகள்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘நரகாசுரன்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது!

DIN

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் எல்லோரும் அறிமுகப்படுத்தப்பட்டவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் தனது அடுத்த படமான ‘நரகாசுரன்’ பட வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், சுதீப் கிஷன் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இப்படத்தின் முதல் போஸ்டர் வெளிவந்துள்ளது.

'தேவதைகள் மட்டுமல்ல, சாத்தான்களுக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும்’என்று முன்னரே இப்படத்தைப் பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கார்த்திக் நரேன். தற்போது படத்தின் முதல் இமேஜ் வெளிவந்த நிலையில் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்படும் மிகத் தீவிரமான மர்மத் திரைப்படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்திரஜித் சுகுமாரன்

நரகாசுரன் குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் கூறுகையில், ‘நரகாசுரன்’ படம் நான் இயக்கவிருக்கும் ட்ரைலஜி என சொல்லப்படும் மூன்று பட வரிசையில் இரண்டாவது படம். என்னுடைய முதல் படமான துருவங்கள் பதினாறின் களம் தான் ‘நரகாசுரனும்’. ஆனால் கதை இன்னும் தீவிரத்தன்மையுடன் இருக்கும். ரசிகர்களுக்கு நிறைய ஆச்சர்யங்களை உள்ளடக்கிய படமாகவும் இது இருக்கும். கர்மா, நம்பிக்கை ஆகிய கருத்துக்களை உட்கருவாக இப்படம் இருக்கும். இப்படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

கார்திக் நரேன் படத்தின் போஸ்டரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘நரகாசுரன் ஒரு ஆழமான உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு டார்க் சஸ்பென்ஸ் ட்ராமா வகைத் திரைப்படம். எங்கள் படக்குழுவினர் உற்சாகமாக இந்தப் பட வேலைகளில் மூழ்கியுள்ளோம். உங்களுடைய ஆதரவும் தேவை’ என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நரகாசுரன் பெயரைப் போல இது அசுர குணம் பற்றிய படம். இதற்கு முன்னால் கார்த்திக் நரேனுக்கு நெருக்கமான நாக சைதன்யா இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருடைய தேதிகள் கிடைக்காத நிலையில் சுதீப் கிஷனை கோவாவில் சந்தித்தி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர் கார்த்திக். சுதீப்புக்கு இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது.

'நரகாசுரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும். அடுத்த வருடம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார் கார்த்திக் நரேன். இந்த மும்மொழி படத்தின் இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோகன். தயாரிப்பாளர் கெளதம் வாசுதேவ் மேனன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT