முகப்பு
செய்திகள்

விஜய் - அட்லி படம்: புதிய அதிகாரபூர்வ தகவல்கள்!

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் படத்தின் தலைப்பும் விஜயின் பிறந்தநாளையொட்டி...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:48 PM
பகிர்:

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகிவரும் படம் குறித்த புதிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. 

ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.

விஜய் 61 என்று அழைக்கப்படும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் படத்தின் தலைப்பும் விஜயின் பிறந்தநாளையொட்டி (ஜூன் 22), ஜூன் 21 அன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  

அதேபோல பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. விஜய் 61 படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவருகிறது. அக்டோபர் மாதம் படம் வெளிவருகிறது என்றும் பத்திரிகைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.