முகப்பு
செய்திகள்

விஜய் பிறந்தநாள்: மெர்சல் படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியீடு!

தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடி முதல் விஜய் ரசிகர்கள் இப்படம் பற்றிய புதிய தகவல்களைச் சமூகவலைத்தளங்களில்...

Updated On : 22 ஜூன், 2017 at 10:50 AM
பகிர்:

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகிவரும் படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. 

ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 

Advertisement

விஜய் 61 என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் படத்தின் தலைப்பும் விஜயின் பிறந்தநாளையொட்டி (ஜூன் 22), நேற்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டது. படத்துக்கு மெர்சல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடி முதல் விஜய் ரசிகர்கள் இப்படம் பற்றிய புதிய தகவல்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். பிறகு நள்ளிரவில் படத்தின் மற்றொரு போஸ்டரும் வெளியிடப்பட்டது. 

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. தீபாவளியன்று படம் வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.