செய்திகள்

மீண்டும் இணையும் விஜய் - ஏ.ஆர். முருகதாஸ்! தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்!

அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஏப்ரலில் படம் வெளிவர வாய்ப்புள்ளதாக...

எழில்

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளார்கள் விஜய்யும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும்.

அட்லி இயக்கும் மெர்சல் படத்தில் தற்போது நடித்துவருகிறார் விஜய். இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக இருவரும் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஏப்ரலில் படம் வெளிவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இதில் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவருகிறது. இசை, ஹாரிஸ் ஜெயராஜ்; ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவன். செப்டம்பர் 29 அன்று இப்படம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT