முகப்பு
செய்திகள்

விக்ரம் வேதாவை இந்தியில் எடுக்க ஆசை! மாதவன்

நடிகர் மாதவன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் விக்ரம் வேதா. படத்தின் இயக்குனர் புஷ்கர் காயத்ரி

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

நடிகர் மாதவன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் விக்ரம் வேதா. படத்தின் இயக்குனர் புஷ்கர் காயத்ரி. மாதவனுடன் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் ஆகியோர் நடிக்கின்றனர். விக்ரம் வேதாவை இந்தியில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார் மாதவன். ஜூலை 7-ஆம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் மாதவன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார்.

மாதவன் இதற்கு முன் நடித்த இறுதிச் சுற்று இந்தியிலும் படமாக்கப்பட்டது. ஆனால் விக்ரம் வேதா படம் வட சென்னையில் நடப்பதாக அமைந்துள்ளது என்பதால் இந்தியில் இதனை எடுக்கவில்லை. விக்ரம் வேதா படத்தை, படக் குழுவை பாலிவுட்டுக்கு அழைத்துப் போக விரும்புகிறேன். காரணம் இத்திரைப்படத்தின் கதை பாலிவுட்டுக்கும் பொருந்தும். சூழல் சரியாக அமைந்தால், நிச்சயம் இப்படத்தை இந்தியில் எடுப்பேன்’ என்றார். படத்தைப் பற்றி கூறுகையில், 'படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், படக்குழுவினரை விட்டுப் பிரியவே மனமில்லை’என்றார் மாதவன்.
 

முழு கட்டுரையைப் படிக்க →