முகப்பு
செய்திகள்

ஒரே நாளில் வெளியாகும் 9 தமிழ்ப் படங்கள்!

மார்ச் இறுதியில் ஆரம்பித்து அடுத்த மாதம் முழுக்க பெரிய படங்கள் வெளியாவதால்...

Updated On : 22 மார்ச், 2017 at 4:25 PM
பகிர்:

முதலில் சில நாள்களுக்கு முன்பு வெளியான விளம்பரங்களைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டது உண்மைதான்.

மார்ச் 24 அன்று 12 படங்கள் வெளிவருவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் இன்றைய செய்தித்தாள்களில் 9 படங்கள், வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளன.

காரணம்?

Advertisement

மார்ச் இறுதியில் ஆரம்பித்து அடுத்த மாதம் முழுக்க பெரிய படங்கள் வெளியாவதால் அதற்கு முன்பு சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.

கடுகு, தாயம், பாம்பு சட்டை, எங்கிட்ட மோதாதே, அரசகுலம், வைகை எக்ஸ்பிரஸ், இவன் யாரென்று தெரிகிறதா, 465, 1 ஏஎம் என 9 படங்கள் வெள்ளியன்று வெளியாக உள்ளன. இந்த அத்தனை படங்களும் சரியான அளவில் திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. எனவே வெள்ளியன்று ஒன்றிரண்டு படங்கள் வெளியாகாமல் போகவும் வாய்ப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.