உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு வரிவிலக்கு!
பொதுவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் எழும்.
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள சரவணன் இருக்க பயமேன் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்குத் தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
பொதுவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பது அரிதாகவே நடக்கும். இதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடிய சம்பவங்கள் எல்லாம் உண்டு.
சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் உள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் இப்படத்துக்கு எவ்வித சிரமும் இன்றி வரிச்சலுகை கிடைத்துள்ளது.
Advertisement
இப்படத்தைப் பார்த்த ஏழு உறுப்பினர்களும் வரிவிலக்கு அளிக்கப் பரிந்துரை செய்துள்ளார்கள்.