முகப்பு
செய்திகள்

அர்ஜூன், பிரசன்னா மற்றும் வரலக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள 'நிபுணன்' டீசர்! 

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், பிரசனா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் நிபுணன் படத்தின் டீசர் இன்று வெளியானது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:31 PM
பகிர்:

சென்னை: 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், பிரசனா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் நிபுணன் படத்தின் டீசர் இன்று வெளியானது.

'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் நடித்து வரும் புதிய திரைப்படம் நிபுணன். இது அவரது 150வது படமாகும். இப்படத்தில் இந்த படத்தில் அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன், சுமன், சுஹாசினி, வைபவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தொடர் கொலைகளில் ஈடுபடும் சைக்கோ கொலைகாரன் ஒருவன் பற்றிய விசாரணைக்காக பல்வேறு நாடுகளுக்கு கதாநாயகன் உளவு வேலை பார்க்க செல்வது போல இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நவின் இசையமைத்துள்ள இப்படத்தில் பாடல்களை மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →