முகப்பு
செய்திகள்

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது மனைவி புகார்!

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவருடைய மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Updated On : 23 மே, 2017 at 11:00 AM
பகிர்:

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவருடைய மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி (43), தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவருடைய மனைவி நித்யா (30). 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். போஷிகா என்கிற 6 வயது பெண் குழந்தை உண்டு.

இந்நிலையில் மாதவரம் காவல்நிலையத்தில் நித்யா, பாலாஜி மீது புகார் அளித்துள்ளார். தன் கணவர் தனது ஜாதியைச் சொல்லித் திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதாகவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாலாஜி மற்றும் நித்யா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.