செய்திகள்

பிரேமம் ஹீரோ நிவின் பாலிக்கு பெண் குழந்தை பிறந்தது!

DIN

'பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டவர் மலையாள நடிகர் நிவின் பாலி. தற்போது கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்‌ஷன் படமான ரிச்சி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்தும் ஒரு தமிழ் படத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. 

நடிகர் மாதவனுக்குப் பிறகு சாக்லேட் பாயாக கருதப்படும் நிவின் பாலி காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். ரின்னா என்பவரை கல்லூரி காலத்திலிருந்தே காதலித்து 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர். இக்காதல் தம்பதியருக்கு 5 வயதில் தாவீத் என்ற மகன் உண்டு. நேற்று அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘It's a Girl' என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

இச்செய்தியுடன் பலூனில் பதிவிட்ட புகைப்படத்தை வெளியிட்டு நிவின் பாலி டிவிட்டர் பக்கத்தில் வித்யாசமாக பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT